நீர்கொழும்பு, பமுனுகம வீதியில் லெல்லம அருகில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவத்திற்கு உதவிய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்லவும் மறைத்துவைக்கவும் உதவியதற்காக சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் பதுவத்தை மற்றும் அம்பலயாய ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமைய குற்றவாளிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் நீர்கொழும்பு பிரதேச குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.