மாவத்தை பஸ் டிப்போவில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் பேருந்து நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து அவர்கள் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
விசாரணைகள் CCD யிடம்
கொழும்பு – பெஸ்டியன் மாவத்தையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் CCD யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று காலை கொழும்பு – பெஸ்டியன் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.