கொழும்பு – கொலன்னா, அப்டன் தோட்டத்தின் உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூட்டு நடாத்தப்பட்டதற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வீட்டிலிருந்த நபரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 61 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மற்றும் அவரது மனைவி வீட்டில் தங்கியிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் வந்து இறந்தவர் வீட்டில் இருக்கிறாரா என்று மனைவியிடம் கேட்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த நபர் வீட்டிலிருந்து வெளியே வந்த போது சுட்டுக்கொல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.