கொழும்பு – பெல்லன்வில பகுதியில் வைத்து நேற்றிரவு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் 24 வயதுடைய மலேசிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையின் போது, குறித்த பெண்ணிடமிருந்து 3 கிலோ கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மொத்த பெறுமதி 11 கோடி ரூபா என பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கங்கொடவில நீதவான் நீதிமன்றில் பெற்றுக்கொள்ளப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் குறித்த பெண்ணிடம் மேலதிக விசாரணைகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்குவின் ஆலோசனையின் பேரில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் பணிப்பாளர் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.