இலங்கை வங்கி மாவத்தையின் நுழைவாயிலில் உயர் தேசிய டிப்ளோமா மாணவர் சங்கத்தின் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கொழும்பு கோட்டை பிரதேசத்தின் பல்வேறு வீதிகளிலும் உள்நுழைய உயர் தேசிய டிப்ளோமா மாணவர்கள் ஒன்றியத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய யோர்க் வீதி, Chatham வீதி மற்றும் வங்கி வீதி (Bank Street) ஆகிய வீதிகளில் பிரவேசிப்பதற்கும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவதற்கும் கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.