கொழும்பில் பல்லைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கவுள்ள பேரணிக்கு தடை விதிக்குமாறு, பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பல்லைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து நெளும் பொக்குண தொடக்கம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரை முன்னெடுக்கவுள்ள பேரணிக்கு தடை விதிக்குமாறு, கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.
இதனை நிராகரித்த கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க, பாதசாரிகள் சட்டம் ஒழுங்கை மீறும் வகையில் செயற்பட்டால் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 95ஆவது பிரிவின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் பல்லைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கவுள்ள பேரணிக்கு தடை விதிக்குமாறு, பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.Karihaalan News
No Comments1 Min Read

