கொழும்பில் போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏழு வயது மகனை கடுமையாக கொடுமை செய்த தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் தனது 7 வயது மகனை தனது கணவர் தரையில் அடித்ததாக பெண் ஒருவர் கிராண்ட்பாஸ் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
தனது கணவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு தன்னையும் பிள்ளையையும் தொடர்ந்து துன்புறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவ தினத்தன்று தனது கணவர் பணம் கேட்டு தன்னை கொடூரமாக தாக்கியதாகவும், அருகில் வந்த தனது 7 வயது மகனை தூக்கி தரையில் கொடூரமாக தாக்கியதாகவும் அந்த பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விரைந்து செயற்பட்ட பொலிஸார், சந்தேக நபரைக் கைது செய்தனர்.
இதேவேளை, சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவன் கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும், சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்காக பல சந்தர்ப்பங்களில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.