மருதானை பொதுச் சந்தையிலுள்ள கடையொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15,000 கோழி முட்டைகளை நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதிகார சபை அதிகாரிகள் நடத்திய சோதனையில், முட்டைகளை பதுக்கி வைத்து நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் விற்பனை செய்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட முட்டைகளை அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கு விற்பனையாளர்களால் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதேவேளை, அதிக விலைக்கு பொருட்களை கொள்வனவு செய்யாதிருக்குமாறும், அவ்வாறான முறைகேடுகள் தொடர்பில் அதிகார சபைக்கு அறிவிக்குமாறும் நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.