கொழும்பு மாவட்டம் ஹங்வெல்ல பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கி நபர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் கடந்த 6-08–2024 ஆம் திகதி ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்மோதர குமாரி எல்ல வீதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இது தொடர்பான சந்தேக நபர்கள் இருவர் பாதுக்கை கலபெதிஹேன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் உடுமுல்லை மற்றும் வட்டரெக்க பிரதேசங்களை சேர்ந்த 34 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட 02 மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.