பொரளை – ஆனந்தராஜகருணா மாவத்தையில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டால் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போதை பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.