கொழும்பு – ஆமர் வீதி சந்திப் பகுதியில் அனைத்து வீதிகளையும் மறித்து மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
எரிவாயு கட்டாயம் வழங்கப்படும் என பொலிஸார் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதுடன், தமக்கு எரிவாயு கிடைக்காவிடின் நாளைய தினம் நடுச்சந்தியில் கூடாரம் அமைத்து வீதிகளை மறித்து தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுப்போம் என குறிப்பிட்டுள்ளனர்.
என்ற போதும் அப்பகுதியில் தொடர்ந்தும் அசாதாரண நிலையே காணப்படுவதாகவும், பொலிஸ் அதிகாரியை சூழ்ந்துள்ள மக்கள் தமக்கு உறுதியாக எரிவாயு கிடைக்கும் என்பதை தெரிவித்து பின் அங்கிருந்து செல்லுமாறும் கோரி தாமும் அங்கிருந்து செல்ல மறுத்து வருகின்றனர்.
நான்காம் இணைப்பு
கொழும்பு – ஆமர் வீதி சந்திப்பகுதியில் தற்போது பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பொலிஸார் கைகளில், தடியடி பிரயோகம் மேற்கொள்ளும் பொல்லுகள் காணப்படும் நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அச்சமடைந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பகுதியில் தமக்கு எரிபொருள் கோரி மக்கள் வீதிகளை மறித்து போராட்டத்தில் நேற்று முதல் ஈடுபட்டு வருகின்றனர்