கொழும்பில் உள்ள பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தொழிற்சங்க ஊடகவியலாளர் மாநாட்டிற்கு இடையூறு விளைவித்த 4 சந்தேக நபர்களை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இந்த ஊடகவியலாளர் மாநாடு இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த மாநாட்டின் போது, வெளியாட்கள் சிலர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தவிடாது குறுக்கிட்டுள்ளனர்.
இதையடுத்து பொலிஸார் அந்த இடத்திற்கு சென்று இடையுறு விளைத்த சந்தேக நபர்கள் 4 பேரையும் துரத்திச் சென்று கைது செய்துள்ளனர்.
பொலிஸார் துரத்திச் சென்று 4 பேரையும் கைது செய்த விதம் தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளது.