கொழும்பில் 17 வயது மாணவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் கொழும்பு, கிராண்ட்பாஸ், ரந்திய உயன அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 17 வயதான அப்துல் லத்தீப் என்ற இவ்வாறு இளைஞனே கொல்லப்பட்டார். நேற்று முன்தினம் ரந்திய உயன தொடர்மாடி குடியிருப்புக்கு தனது நண்பர்களுடன் குறித்த இளைஞன், மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
இதன்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த மற்றுமொரு தரப்பினர், ரிக்ரொக் வீடியோ தொடர்பில் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் , மறைத்து வைத்திருந்த கத்தியால் அவ்விளைஞனின் அடிவயிற்றில் குத்தியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தப்பிச்சென்ற 6 பேரும் நேற்று (04) கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் 16 மற்றும் 17 வயதுக்கு இடைப்பட்டவர்கள். 3 பேர் பாடசாலையில் கல்வி கற்கிறார்கள் என்றும் மற்றையவர்கள் கல்வியை இடைநிறுத்தியவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.