கொழும்பின் புறநகர் பகுதியான கெஸ்பேவ பிரதேசத்தில் கோவிட் பரிசோதனை செய்வதற்காக கல்லறை ஒன்றைய தெரிவு செய்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு ரெபிட் என்டிஜன் பரிசோதனைக்கு 85 பேரும் PCR பரிசோதனைக்கு 17 பேரும் வருகைத்தந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எனினும் கோவிட் பரிசோதனை செய்வதற்காக இவ்வாறான இடமொன்று தெரிவு செய்திருப்பது வருத்தமாகவும் குழப்பமாகவும் இருப்பதாக பலர் தெரிவித்துள்ளனர்.
சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்திற்கு இடவசதி போதுமானதாக இல்லை என்பதனால் இவ்வாறான ஒரு இடத்தை தெரிவு செய்த நேர்ந்ததாக கெஸ்பேவ சுகாதார வைத்திய அதிகாரி நந்தனி சோமரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்வதற்கு பாடசாலைகளின் மைதானங்களை பயன்படுத்திய நிலையில் தற்போது அவை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.