கொழும்பில் அமைந்துள்ள விளையாட்டு அமைச்சுக்கு அருகில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் தீ விபத்து சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இன்று (20) அதிகாலை 5.30 மணி அளவில் இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த தீ விபத்தினால் அப்பகுதியில் அமைந்துள்ள உணவக கட்டிடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உணவகத்தில் ஏற்பட்ட எரிவாயுக் கசிவினால் தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான 6 தீயணைப்பு வாகனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் குறித்து கறுவாத்தோட்ட பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.