கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அங்கு சிறிதுநேரம் பதற்ற நிலை நிலவியுள்ளது.
குறித்த தீ விபத்து நேற்றையதினம் (24-05-2024) நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும், வைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், தீ முற்றாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.