கொழும்பு – மகரகம பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (10) இரவு இடம்பெற்றுள்ளது.
கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் நண்பர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் ஒருவரை மற்றைய நபர் கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார்.
31 வயதுடைய இளம் குடும்பஸ்தரே இந்தச் சம்பவத்தில் சாவடைந்துள்ளார்.
கொலையாளியான 28 வயதுடைய இளைஞர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

