கொழும்பு – கொட்டாஞ்சேன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் நேற்றைய தினம் (24-01-2024) இரவு 9.30 மணியளவில் ஜிந்துபிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் ஆட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஜோஜ்ராஜ் தனுஷ்ராஜ் என்ற இளைஞன் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கடந்த இரண்டு நாட்களாக தங்காலை பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், பௌத்த பிக்கு ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.