கொழும்பு வாகன விபத்தில் 15 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் கொழும்பு, மகரகம பிரதேசத்தில் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் பாரவூர்தி ஒன்று மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் இருந்து பயணித்த சிலம்பரசன் வாகீசன் (வயது 15) என்ற சிறுவன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 27 வயது இளைஞர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இளைஞர் உயிரிழந்த சிறுவனின் உறவினர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்துக்குக் காரணமான பாரவூர்தியின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.