கொழும்பு, செட்டியார் தெரு பகுதியிலுள்ள தங்க நகை விற்பனை நிலையமொன்றில் கத்திக் குத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவரும் நிலையில் இதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நகை விற்பனை நிலையத்தில் இருந்த, இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்தே இந்த கத்தி குத்து சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.
அதோடு தனிப்பட்ட பிரச்சினையே இந்த கத்தி குத்துக்கான காரணம் என தெரிய வருவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் சம்பவத்தில் காயமடைந்த நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.