கொழும்பில் உள்ள 50 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு உறுதிப் பத்திரங்களை வழங்கும் ஆரம்பக் கட்ட நிகழ்வு எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.
மேலும், நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான மிஹிந்து செத்புர, சிரிசர உயன மற்றும் மெட்ரோ வீட்டுத் தொகுதிகளின் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கும், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு உட்பட்ட வீட்டுத் தொகுதிகளில் வசிக்கும் சுமார் 1,500 பேருக்கும் உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.
இந்த உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்குச் சட்டமா அதிபரிடம் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபையின் சான்றிதழ் பெற்ற அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் இந்த உறுதிப் பத்திரம் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.