கொமும்பு கண்டி பிரதான வீதியில் பேருந்து வேனுடன் மோதியதில் வேன் சாரதி உயிரிழந்துள்ளார்.
கொழும்பு பிரதான வீதியின் நித்தவெல்கட பகுதியில் ஸ்ரீலங்காம பேரூந்து ஒன்று வேனைக் கடந்து செல்ல முற்பட்ட போது முன்னால் வந்த 3 வேன்களுடன் மோதி விபத்துக்குள்ளானது.
நேற்று மதியம் இடம்பெற்ற இந்த விபத்தில் வேன் சாரதியான கம்பளை – மரியாவத்தை பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
வேனின் பின்னால் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் ருமேனிய நாட்டவரும் ஆவார்.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி பொலிஸ் பாதுகாப்பில் வட்டு பிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.