தொகுப்பாளினி டிடி மினுமினுக்கும் ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளிவருகின்றது.
பிரபல தொகை்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் திவ்யதர்ஷினி.
இவரை ரசிகர்கள் செல்லமாக டிடி என அழைப்பார்கள். காஃபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகளையும் கவர்ந்தார்.
அதனை தொடர்ந்து விசில் திரைப்படம் தொடங்கி பவர் பாண்டி, சர்வம் தாள மயம், காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளதுடன் சில திரைப்படங்களில் பின்னணி குரலும் கொடுத்து, வெள்ளித்திரையிலும் தனது திறமையை பறைசாற்றினார்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார் ஆனால் இவர்களுடைய திருமண வாழ்கை விவாகரத்தில் முடிந்தது.
அண்மைகாலமாக உடல்நிலை காரணமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை நிறுத்திவிட்டார். முழங்கால் வலிக்காக அவர் முதலில் செய்த ஆபரேசன் தவறாகிய நிலையில், தற்போது டிடி அவரது கால் பிரச்சனையை சரிசெய்ய முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.
வெகு நாட்களாக முழங்கால் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த டிடி தற்போது தான் சரியாகி இருக்கின்றார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் டிடி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிவது வழக்கம்.
இந்நிலையில் அழகிய ட்ரெண்டிங் உடையில் மெழுகு பொம்மை போல் காட்சியளிக்கும் தொகுப்பாளினி டிடியின் புகைப்படங்கள் இணையத்தில் மின்னல வேகத்தில் லைக்க்குகளை அள்ளி வருகின்றது