தம்புத்தேகம இரண்டு கோடி பணக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினர் சுரங்க மகேஷ் சூரியாராச்சியின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
தம்புத்தேகம தனியார் வங்கி முன்பாக 223 இலட்சம் ரூபா கொள்ளையிட முயற்சித்த சம்பவம் தொடர்பில் மொட்டு கட்சியின் ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினரை பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.