இலங்கையில் கொவிட் தொற்றினால் புதிதாக 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 4 ஆண்களும் 5 பெண்களும் அடங்குகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து இலங்கைக்குள் கொவிட் தொற்றினால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 16ஆயிரத்து 603 ஆக உயர்ந்துள்ளது.
அதேவேளை அண்மை காலங்களில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் உயிரிழபோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது