இரத்தினபுரி – பலங்கொடை தள வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த கொரோனா நோயாளி ஒருவர் இன்று பகல் தப்பியோடியுள்ளார்.அவிசாவளை – கொஸ்ஹேன்கம, ஹேவாயின்ன பிரதேசத்தைச் சேர்ந்த நந்தசிறி போவத்த என்ற 72 வயது நபரே இவ்வாறு தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு உரித்தான பகுதியில் இருந்தபோது கோவிட் தொற்று உறுதியாகியதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் தப்பியோடியவரை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.