கொரோனா தொற்றாளர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள் இருப்பதாக முறைப்பாடு எழுந்துள்ளது.
நாஉல, அம்பன சிகிச்சை நிலையத்தில் கொரோனா தோற்றாளர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நாஉல- அம்பன பகுதியில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அழைப்பதற்கு தனி அரை தொகுதி ஒன்று நிர்மாணிக்கப்பட்டது.
இந்த அறையில் மாத்தளை மாவட்ட கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர்களுக்கு வைத்தியசாலையின் கண்காணிப்பின் கீழ் உணவு வழங்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சமீப காலமாக அவர்கள் அழைத்து வரும் உணவில் புழுக்கள் இருப்பதாக நோயாளிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பாக மாத்தளை மாவட்ட சுகாதார பணிப்பாளர் சமிந்த வீரகோன கூறியதாவது,
நோயாளிகள் தன்னிடம் இது தொடர்பில் முறைப்பாடு செய்ததாகவும், அதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.