நாட்டில் பரவும் கொரோனா தொற்று காரணமாக பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளமை சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி இசிப்பத்தான கல்லுரியைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவர் ஒருவரும் கொழும்பில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் 17 வயதுடைய மாணவி ஒருவருமே இவ்வாறு கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
இசிப்பத்தான கல்லுரியைச் சேர்ந்த சமித்த டில்துஷான், களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
ஆகஸ்ட் 14 ஆம் திகதி மூச்சுத்திணறல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சமித்த டில்துஷான், மேலதிக சிகிச்சைகளுக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.