நாட்டில் மேலும் 4பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குகின்றனர். அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 16,583 ஆகும்.
இதேவேளை, இலங்கையில் மொத்தமாக அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 666,580 ஆக காணப்படுகிறது.