கொரியாவில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வேலைகளுக்கான பணியாளர்கள் ஆட்சேர்ப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.
2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல், கொரிய அரசாங்கம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு புதிய பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதை நிறுத்தி வைத்தது.
அதன்படி, கொரிய மொழிப் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த 33 புதிய வேலை தேடுவோர் நேற்று (07) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தென் கொரியா நோக்கிப் புறப்பட்டனர்.