கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலையை 10% குறைக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 700 ரூபாவாக இருந்த கொத்து ரொட்டியின் விலை 70 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 1000 ரூபாயாக காணப்பட்ட கொத்து ரொட்டியின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கொத்து ரொட்டியானது 500 ரூபாய் முதல் 1300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன் ப்ரைட் ரைஸ் 350 ரூபாய் முதல் 1900 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
அதேநேரம் சாதம் 250 ரூபாய் முதல் 430 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
எவ்வாறாயினும் பசும்பால் மற்றும் பால்மா கலவையுடனான தேநீர் மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலையில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.