திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பண்ணைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், கொட்டகலை நகரிலிருந்து லொக்கீல் நோக்கி பயணிப்பதற்கு தயாரான வான் ஒன்றிலேயே மோதியுள்ளது. இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமைந்துள்ளனர்.
படுகாயமடைந்த இருவரும் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக விபத்துத் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.