கொக்குவில் கேணியடிப் பகுதியில் நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில்,யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 8 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் குறித்த பகுதியினைச் சேர்ந்த உதயகுமார் ரதீபன் என்னும் இளைஞரே காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட குழுவினால் இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கை, கால் பகுதிகளில் காயமடைந்த குறித்த இளைஞர் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கொக்குவில் கேணியடிப் பகுதியில் நடந்த வாள்வெட்டுச்-இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில்,யாழ்.போதனா வைத்தியசாலையில்
No Comments1 Min Read

