மதுபான உற்பத்தி நிலையங்களில், இதுவரை கையிருப்பில் உள்ள மதுபானங்களின் அளவு குறித்து, அறிக்கை கோரப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில மதுபான வகைகளுக்கான இலங்கையின் தரநிர்ணயம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய சில மதுபானங்களுக்கு, தரநிர்ணயம் செய்ய எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரித் திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தரநிர்ணயங்களுக்கு அமையவே, இலங்கையில் மதுபானங்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதுடன், இறக்குமதி செய்யவும் முடியுமென இறக்குமதியாளர்களுக்கும், உள்ளூர் மதுபான உற்பத்தியாளர்களுக்கும் கடந்தவாரம் எழுத்துமூலம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள், அந்த தரநிர்ணயங்களுக்கு அமையவே, இனிமேல் சந்தைக்கு விநியோகிக்க அனுமதிக்கப்படும் என மதுவரித் திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.