கெரவலப்பிட்டிய LNG மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்காவுக்கு வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கான பேச்சுவார்த்தையை முக்கியமான சில தொழிற்சங்கங்கள் ஆரம்பித்திருப்பதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன. அந்த வகையில் இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் இதற்கான தலைமையை ஏற்று நடத்தவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விநியோகப் பிரிவு தொழிற்சங்கம், துறைமுக ஊழியர்கள் தொழிற்சங்கம் உள்ளிட்ட தரப்பினரும் இதில் இணைந்து வேலைநிறுத்தத்திற்கு பேச்சு நடத்திவருகின்றனர்.
மாத இறுதியில் இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படலாம் என்றும் அவ்வாறு இடம்பெற்றால், முழு நாடும் ஸ்தம்பித்துப் போகும் அபாயம் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.