மின் உபகரணத்தால் கூந்தலை அலங்கரித்து கொண்டிருந்த பெண் ஒருவர் மின்சாரத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் பொல்கஸ்ஓவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் பொல்கஸ்ஓவிட்ட பிரதேசத்தை சேர்ந்த காஞ்சனா சுபாசினி என்ற 30 வயதுடைய மூன்று வயது பிள்ளையின் தாயாவார்.
இவர் தேசிய பயிலுனர் தொழில்நுட்பப் பயிற்சி அதிகாரசபையில் முகாமைத்துவ உதவியாளராக பணியாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

