குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 46 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் வீட்டு வேலைக்காகச் சென்று அங்கு சட்டவிரோதமாக தங்கியிருந்த நிலையில் இலங்கை தூதரகத்தில் பதிவுசெய்த 46 இலங்கையர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
இவர்களில் 39 பேர் வீட்டுப் பணிப்பெண்கள் எனவும் ஏனைய 7 ஆண்கள் வேறு தொழில்களில் ஈடுபட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிலையில் 46 பேரும் இன்று செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை 3.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் நீண்ட காலமாக வீசா இன்றி குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்துள்ளனர்.
இதேவேளை நாடு திரும்புவதற்காக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் 2000 க்கும் அதிகமான வீட்டுப் பணியாளர்கள் பதிவு செய்துள்ளதாக தூதுவர் காண்டீபன் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.