இன்றைய கால கட்டத்தில் அனைவரது கைகளிலும் ஸ்மாட்போன் இருப்பது வழக்கமாகி விட்டது. அந்த வகையில் தற்கால குழந்தைகள் ஸ்மாட்போன்களுக்கு அடிமைகளாக மாறி விட்டனர்.
ஒரு கட்டத்தில் சாப்பாடு ஊட்டுவதென்றால் கூட குழந்தைகளுக்கு போன் தான் தேவைப்படுகின்றது. இப்போது குழந்தைகளின் பாடசாலை படிப்புகள் கூட இந்த ஸ்மாட்போனை முக்கியமாக வைத்து தான் நடைபெறுகிறது.
எனவே தான் நாம் குழந்தைகளிடம் ஸ்மாட்போன்களை கொடுக்கும் போது போனில் இந்த ஐந்து செட்டிங்ஸ் மாற்ற வேண்டும். அது எந்தெந்த செட்டிங்ஸ் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
1.போனில் பேரண்டல் கண்ட்ரோல் எனும் ஒரு ஒப்ஷன் உள்ளது. இந்த ஒப்ஷனை நீங்கள் எனேபிள் செய்ய வேண்டும்.
இவ்வாறு எனேபிள் செய்வதால் உங்கள் குழந்தைகள் போனில் தேவையில்லாத வெப்சைட்டுக்கு போனால் அப்ளிகேஷன்கள் மற்றும் ஃபைல்களை அணுகுவதற்கான அனுமதியை கேட்கும். இதனால் அவர்களை் அதை அணுக மாட்டார்கள்.
2.இரண்டாவது ஒப்ஷன் கன்டென்ட் ஃபில்டர்ஸ் இதுவும் ஒரு ஒப்ஷனாகும். இந்த ஒப்ஷனின் மூலம் நீங்கள் பெரியவர்களுக்கான வெப்சைடுகள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையில்லாத வெப்சைடுகளை நீங்கள் Block செய்யலாம்.
3.சேஃப் சர்ச் செட்டிங்ஸ் இந்த ஒப்ஷனின் மூலம் நீங்கள் ஆபாசம் கலந்த தேடல் முடிவுகளை ஃபில்டர் செய்யலாம்.
இதனால் நமது குழந்தை வெப்சைடுகளில் ஏதாவது ஒரு விஷயத்தை தேடும் போது அவர்களுக்கு அவர்கள் தேடும் விஷயம் மட்டுமே கிடைக்கும்.
4.ஆப் பெர்மிஷன்கள் இந்த ஒப்ஷனின் மூலம் போன் தொடர்புகள் மற்றும் லொகேஷன் பொன்ற விஷயங்கள் முக்கிய தகவல்களை அணுகுவதற்கான அனுமதியை இந்த செட்டிஸ்ஸை வைத்து அப்படியே மாற்றி அமைக்கலாம்.
5.ஸ்கிரீன் டைம் லிமிட் இந்த ஒப்ஷன் மூலம் உங்கள் குழந்தை எவ்வளவு நேரத்திற்கு போனை பயன்படுத்த வேண்டும் என்பதை கட்டுப்படுத்தலாம்.
இதன் மூலம் ஸ்கிரீன் டைம் லிமிட் செய்து வைக்கலாம். இவ்வாறு செய்தால் உங்கள் குழந்தை அதிக நேரத்திற்கு போனை பயன்படுத்தாது.