வெல்லம்பிட்டிய சிங்கபுர குளியல் கிணறுக்கு அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு நேற்று (04) பிற்பகல் 119 என்ற அவரச அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வெல்லம்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதோடு இறந்தவர் 50 முதல் 55 வயதுக்கு இடைப்பட்ட 05 அடி 03 அங்குல உயரம் கொண்டவர் என்றும் வெள்ளைக் கோடிட்ட ஊதா நிறத்திலான சட்டையும் கலப்பு நிற சாரமும் அணிந்திருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
திடீர் மரண விசாரணையின் பின்னர் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.