நேற்றிரவு பாடசாலை மாணவி ஒருவர் தனது வீட்டின் குளியலறையில் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டதில் உயிரிழந்துள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கலஹா பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய பாடசாலை மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் தனது குடும்பத்தினருக்கு தெரியாமல் இரகசியமாக கைப்பேசி ஒன்றை பயன்படுத்தியுள்ள நிலையில், கைப்பேசியில் வந்த குறுஞ்செய்தியைக் கண்டு மாணவியின் சகோதரன் அது குறித்து எச்சரித்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் அவரது வீட்டின் குளியலறையில் மாணவி தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சடலத்தின் பிரேதப் பரிசோதனை நேற்று (16) கண்டி பொது வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
கலஹா பொலிஸ் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் லலித் மஹகெதரவின் பணிப்புரையின் பேரில் கலஹா பொலிஸ் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.