வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் குளவி தாக்கிய நிலையில் முதியவர் ஒருவர் இன்று பகல் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை உமர் வைத்தியர் வீதியைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையாக மீராலெப்பை அபூசாலி (74 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடி சந்தை வழியாக தனது வீட்டுக்கு வரும் வழியில் தேன் கூடு கலைந்திருந்த நிலையில் தேன் பூச்சிகள் குறித்த நபரை தாக்கிய நிலையில் அவரை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் இருதய நோயாளி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த நபரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இருந்து அகில் அவசர பிரிவு வாகனத்தின் ஊடாக உறவினர்களின் ஒப்படைக்கப்பட்டுள்ளது.