செட்டிகுளம், கலாசியம்பலாவ தம்பனைக்குளத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (26) மாலை குளத்திற்கு சென்றவர்கள் குளத்தில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்து பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் வீட்டில் இருந்து நேற்றைய தினம் நண்பர்களுடன் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. குறித்த இளைஞரை அவரது வீட்டார் தேடி வந்த நிலையிலேயே குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா, செட்டிகுளம், தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஹரிந்து கோசல்யுஸ் வெத்தியாராச்சி (வயது 24) என்பவராவார்.
குறித்த இளைஞரின் மரணம் தொடர்பில் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில், செட்டிகுளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.