இந்த ஆண்டு குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் கலைஞர்களுக்கு கிட்டத்தட்ட 2,000 வீடுகளை கட்ட நகர்ப்புற மற்றும் வீட்டுவசதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
தெமட்டகொட, பேலியகொட, மொரட்டுவ, மஹரகம மற்றும் கொட்டாவ ஆகிய பகுதிகளில் 1,996 வீட்டுத் தொகுதிகளை நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 1,888 வீடுகளும், கொட்டாவவில் நிர்மாணிக்கப்படும் 108 வீடுகள் கலைஞர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.