குருநாகல் – அலவ்வ, போயவலன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் லொறி மோதியதில் முதியவர் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள மர பதப்படுத்தும் மையத்தில் நேற்று (19) இச் சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது.
இச் சம்பவத்தில் மர பதப்படுத்தும் மையத்தில் பணிபுரிந்து வந்த ஒருவரே உயிரிழந்ததாக தெரியவருகின்றது.
மரங்களை ஏற்றிச் சென்ற லொறி மோதியே குறித்த முதியவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி பதைபதைக்கச் செய்துள்ளதுடன் இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது.

