களுதாவளை பகுதியில் குடிபோதையில் தந்தை தரும் தொல்லைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல், தந்தையை மகளொருவர் கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
களுதாவளையை வசிப்பிடமாகக் கொண்ட க.பவகுணராசா (61) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மகளின் தாக்குதலால் பலத்த காயமடைந்த அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (11) காலை உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மகள் திங்கட்கிழமை (10) கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மகளின் தாக்குதலில் தந்தை கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.