திருகோணமலை முஸ்லிம் இளைஞர்களின் வித்தியாசமான செயல் தமிழ்-முஸ்லிம் நல்லுறவு தொடர்பான நம்பிக்கைக்கு வலு சேர்த்துள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்திற்குச் செல்லும் பாதயாத்திரிகர்களுக்கு திருகோணமலை – தோப்பூர் பிரதேச முஸ்லிம் இளைஞர்கள் குளிர்பானங்கள், பிஸ்கட்கள் வழங்கி உபசரித்துள்ளனர்.
கடந்த 25ம் திகதி மாலை நடைபெற்ற இச்செயற்பாடானது இன நல்லிணக்கத்திற்கு சிறந்த முன்னுதாரணமாகும்.