கிழக்குப் பல்கலைக்கழக தாடிவைத்த மாணவர் விவகாரம் தொடர்பில் தென்கிழக்கு பல்லைக்கழக விரிவுரையாளர் எம்.ஏ.எம்.சமீம் அவர்கள் விரிவான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழக தாடிவைத்த மாணவர் விவகாரம் சம்பந்தமாக பீடாதிபதி, விரிவுரையாளர் இன்னும் பலருடன் பேசினேன். இந்த மாணவர் தாதியர் கல்வி பயிலும் மாணவன். தாதியர் மாணவர்கள் தாடி வைக்க முடியாது. சீருடை அணிவது கட்டாயம் இது அனைத்து தாதியர் பயிற்சி நிலையங்களிலும் பின்பற்றும் ஒரு ஒழுக்கம்.
நான் பல தாதி பயிற்சிகள் மேட்கொள்ளும்போது அவதானித்த ஒரு விடயம் கூட. இந்த மாணவன் வேறு ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு மாறுதல் பெற்று வந்தவர்.
இவர் எந்த விதமான பாதுகாப்பு (Hygenic) நடவடிக்கையும் இல்லாமல் உலாவுவதாகவும் இவர் சம்பதமான பல முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் இவருக்கு பலமுறை அறிவுரைகள் கூறப்பட்டதாகவும் அறியக்கிடைத்தது.
இந்த மாணவன் ஒருசில காலம் பல்கலைக்கழகத்துக்கு செல்லாமல் இருந்ததாகவும் அறியக்கிடைத்தது. இந்த மாணவன் வைத்தியசாலை பயிற்சிக்கு தாடியுடன் சென்றதால் வைத்தியசாலையில் இந்த மாணவனைப்பற்றி முறைப்பாடு கிடைக்கப்பட்டதாகவும் அறியக்கிடைக்கின்றது.
தாதி கல்வியில் பயிற்சி என்பது முக்கியமானது விரிவுரைகளை செல்லாமல் இருப்பவர்களை இறுதி பரீட்சைக்கு அனுப்ப முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
இது ஒரு கலை அல்லது முகாமைத்துவம் போன்ற கல்வியாக இருந்தால் ஏதாவது உதவிகளை செய்யமுடியும். ஆனால் தாதியர் பயிற்சியில் கூடுதலாக பயிற்சி இருப்பதால்தான் அவற்றுக்கு சமூகமளிப்பது அவசியம்.
இந்த குழுமத்தில் உள்ள வைத்தியர்கள் மற்றும் வைத்திய துறை சார்ந்த அறிஞர்கள் உள்ளனர் அவர்கள் தாதியர் ஒழுக்கக்கோவை பற்றி குழுமத்துக்கு தெரியப்படுத்தலாம்.
நான் அண்மையில் தாதியர் ஒழுக்கக்கோவை ஒன்றை மீள்திருத்தம் (Editting) செய்ததில் பங்குவகித்தேன். ஓரளவு தெரிந்து வைத்துள்ளேன். இது சம்பந்தமாக பீடாதிபதி முஸ்லீம் விரிவுரையாளர்கள் முஸ்லீம் வைத்தியர்களை தொடர்பு கொண்டுதான் இந்த மாணவனுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
நாம் திடீர் முடிவுகளை எடுப்பதை விட மிகவும் நிதானமாக தீர்மானம் எடுப்பது சிறந்தது. இது சம்பந்தமாக மட்டக்களப்பு மனித உரிமை ஆணையாளர் ஏ.எல்.இஸ்தீனிடம் விளக்கம் கோரிய போது “கடந்த 1 ம் திகதி சம்பந்தப்பட்ட மாணவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இது சம்பந்தமான அறிக்கைகளை பெற்று, எதிர்வரும் 12ம் திகதி திங்கட்கிழமை விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம்.
சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருமாறு அழைப்பானையும் கொடுத்துள்ளோம். உண்மை என்ன என்பதை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பையும் விசாரிக்காது, சமூக ஊடகங்கள்- வட்சப் குரூப்கள், முகநூல்களில் மட்டுமல்ல, சில ஊடகங்களும் இனவாதத்தை தூண்டும் விதமாக பல கருத்துக்களை முன்வைப்பது முறையானதல்ல என்று தெரிவித்தார்.
4 வருட தாதியர் கல்வி கற்றுக்கொண்டு, இன்னும் 6 மாதத்தில் பல்கழைக்கழக கல்வியை முடித்து வெளியாகி, தாதித்தொழிலை மேற்கொள்ள உள்ள இந்த மாணவரின் இப்பிரச்சனை தொடர்பில் சமூக ஊடகங்ளில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் கீழே தரப்பட்டுள்ளது.