கிளிநொச்சி றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் கோழிக் குஞ்சுகளை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி உடனடி விற்பனைக்கு 500 இற்கு மேற்பட்ட ஊர்க் கோழிக் குஞ்சுகள் (2 கிழமை) உள்ளன.
அத்துடன் காடை கோழிக் குஞ்சுகளும் விற்பனைக்காக காணப்படுவதுடன் அதில் ஒரு கோழிக் குஞ்சினது விலை 250 ரூபாவாக உள்ளது.
பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சுற்றுலாத் தலமே றீ(ச்)ஷா பண்ணை.
இங்கு கோழிப்பண்ணை, மரக்கறி பயிர்செய்கை, காளான் பண்ணை என அடுக்கிக் கொண்டே செல்லுமளவிற்கு பல புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில் மண்புழு உரம் இடம்பிடித்திருந்த நிலையில் தற்போது றீ(ச்)ஷா பண்ணை மக்களுக்கு கோழிக் குஞ்சுகளை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.