தற்போது நிலவுகின்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை (10) விடுமுறை வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக அதிகரித்த மழை பெய்து வருவதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நிலவுகின்ற காலநிலையினை பொறுத்தே விடுமுறையை நீடிப்பதா இல்லை என்பது பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.