கிளிநொச்சி மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை (திங்கள்) முதல் இடம்பெறவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்தியர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, கிளிநொச்சி மாவட்டத்திற்கு 65 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
குறித்த தடுப்பூசிகளை செலுத்துவதற்கு அறிவிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று, காலை ஒன்பது மணி முதல் பிற்பகல் நான்கு மணி வரை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
அதாவது பொது மக்கள் ஒரிடத்தில் அதிகளவில் ஒன்று கூடுவதனை தவிர்பதற்காகவே மாவட்டத்தின் பல இடங்களிலும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளனî என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை (திங்கள்)
No Comments1 Min Read
Previous Articleதிருமண நாளில் 50,000 ரூபாய் உதவி
Next Article Where you can Satisfy A female

